விடுதியில் தீ விபத்து; 8 பேர் உயிரிழப்பு

Webdunia
ஞாயிறு, 14 ஜனவரி 2018 (13:06 IST)
போர்ச்சுகல் நாட்டில் உள்ள ஒரு ஓய்வு விடுதியில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்திலிருந்து தப்பிக்க கூட்டநெரிசலில் சிக்கி சுமார் 8 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதிவாசிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
போர்ச்சுகல் நாட்டின் வில்லா நோவாடா ரெயின்ஹா நகரில் உள்ள ஒரு இரண்டு மாடி ஓய்வு விடுதியில் வார விடுமுறையை களிக்க பொதுமக்கள் கூடினர். அப்போது அங்கு எதிர்பாராத விதமாக தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து மக்கள் அலறியடித்து கொண்டு தீ விபத்திலிருந்து தப்பிக்க வெளியேறினர். இதன்காரணமாக அப்பகுதியில் கூட்டநேரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டநேரிசலில் சிக்கி சுமார் 8 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் அப்பகுதிக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர். மேலும் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 
 
இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுமுறையை சந்தோஷமாக களிக்க வந்தவர்கள் இறந்ததால், அப்பகுதியே சோகமயமாக காணப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு..!

திடீரென தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. வெள்ளியும் திடீரென ரூ.13000 குறைந்ததால் பரபரப்பு..!

ஒரே சமயத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள்.. கனமழை எச்சரிக்கை..!

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் போரை நிறுத்துவது எல்லாம் எனக்கு ஒரு நிமிட வேலை: டிரம்ப்

ஆர்.எஸ்.எஸ் விழாவில் கலந்து கொண்ட அரசு ஊழியர் சஸ்பெண்ட்.. அரசின் அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments