Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மும்பையில் பயங்கர தீ விபத்து: 14 பேர் உடல் கருகி மரணம்

Advertiesment
mumbai
, வெள்ளி, 29 டிசம்பர் 2017 (06:47 IST)
மும்பையில் உள்ள கமலா மில்ஸ் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலர் உயிருக்கு போராடி வருவதால் சாவு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்த தீவிபத்து குறித்த தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்6 தீயணைப்பு வாகனத்தில் வந்த தீயணைப்பு வீரர்கள் பலமணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த தீ விபத்து சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் இருப்பினும் இதுகுறித்து முழுமையாக விசாரணை செய்ய உத்தரவிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

31ஆம் தேதி ரஜினியின் அறிவிப்பு என்னவாக இருக்கும்?