சீனாவில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் 10 பேர் உடல் கருகி இறந்துள்ளனர் மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த டியான்ஜின் தீயணைப்புத் துறையினர் இச்சம்பவம் இந்திய நேரப்படி அதிகாலை 4 மணிக்கு நடைபெற்றதாகவும் விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் உட்கட்டமைப்பு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததாகவும் கூறியுள்ளனர்.
தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்னரே மளமளவென பற்றிய தீயால் 10 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்துள்ளனர், 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதற்கு வருத்தம் தெரிவித்த டியான்ஜின் துணை மேயர், சன் வென்குயி இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.
இதேபோல் 2015ம் ஆண்டு டியான்ஜினில் ஏற்பட்ட தீ விபத்தில் 178 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.