பெஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், திடீரென பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை ஏவுகணை சோதனை நடத்தி இருப்பதாக கூறப்படுவதால் எல்லையில் போர் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என கூறப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பெஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அட்டாரி–வாகா எல்லை பகுதி மூடப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், இனிமேல் பாகிஸ்தானியர்கள் இந்தியா வருவதற்கு விசா வழங்கப்படாது உள்பட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தானில் போர் விமானங்களை எல்லையில் நிலைநிறுத்த உத்தரவு பிறப்பித்துள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தற்போது திடீரென ஏவுகணை சோதனை நடத்தி பாகிஸ்தான் பதட்டத்தை அதிகரித்துள்ளது.
மேலும், இன்றும் நாளையும் மேலும் சில ஏவுகணை சோதனைகளை நடத்த பாகிஸ்தான் திட்டம் தீட்டுவதாகவும் கூறப்படுகிறது. இதனால், இரு நாடுகளுக்கு இடையே போர் பதட்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.