பயங்கரவாத கும்பலை வேட்டையாடும் தாலிபான்! – ஆப்கானிஸ்தானில் பரபரப்பு!

Webdunia
திங்கள், 4 அக்டோபர் 2021 (08:29 IST)
ஆப்கானிஸ்தானில் டேயிஷ் பயங்கரவாத கும்பல் மீது தாலிபான்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்த நிலையில் அங்கு வெவ்வேறு பயங்கரவாத கும்பல்களின் உள்ளீடு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. முக்கியமாக ஐ.எஸ் மற்றும் அதை சார்ந்த சில பயங்கரவாத அமைப்புகள் ஆப்கானிஸ்தானில் தாக்குதல்கள் நடத்த திட்டமிடுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் காபூல் நகரில் உள்ள மசூதி ஒன்றில் குண்டு வெடித்த சம்பவத்தில் 12 பேர் இறந்தனர். இந்த சம்பவத்திற்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் தாலிபான்கள் மற்ற பயங்கரவாத அமைப்புகளை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று தாலிபான்கள் டேயிஷ் எனப்படும் பயங்கரவாத அமைப்பின் பதுங்கு குழிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளன. இதனால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments