Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

23.56 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!

Advertiesment
23.56 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
, திங்கள், 4 அக்டோபர் 2021 (06:04 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை 23.56 கோடியாக அதிகரித்துள்ளது
 
உலகம் முழுவதும் 235,698,268 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 4,815,476 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 212,554,967 பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 18,327,825 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன
 
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44,518,061 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 719,932 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 33,937,282 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 21,468,121 என அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 597,986 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 20,442,653 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 
இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33,834,243 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 449,029 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 33,113,644 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தின் 6 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!