Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாங்களும் முஸ்லிம் நாடுதான்' - ஆப்கானிஸ்தான் தாலிபன்களிடம் கத்தார் கோபம்

Advertiesment
நாங்களும் முஸ்லிம் நாடுதான்' - ஆப்கானிஸ்தான் தாலிபன்களிடம் கத்தார் கோபம்
, சனி, 2 அக்டோபர் 2021 (23:40 IST)
கத்தார் வெளியுறவு அமைச்சர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான்
 
தாலிபன்களுடன் பிற நாடுகளின் அரசுகள் பேச்சுவார்த்தையைத் தொடங்குவதில் கத்தார் முக்கிய பங்கு வகித்துள்ளது. ஆனால் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய பிறகு தாலிபன்களின் நிலைப்பாடு தொடர்பாக கத்தார் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. மகளிர் தொடர்பாக தாலிபன்கள் மேற்கொண்டுள்ள முடிவுகள் மிகவும் ஏமாற்றமளிப்பதாக கத்தார் தெரிவித்துள்ளது.
 
இது பிற்போக்குத்தனமான முடிவு என்று கத்தார் கூறியுள்ளது. கத்தார் வெளியுறவு அமைச்சர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி, கத்தாரில் இஸ்லாமிய ஆட்சி எவ்வாறு செயல்படுகிறது என்பதை தாலிபன்கள் பார்க்க வேண்டும் என்றார்.
 
வியாழக்கிழமை ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கை தலைவர் ஜோசஃப் பொரேலுடன், தலைநகர் தோஹாவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கலந்துகொண்ட கத்தார் வெளியுறவு அமைச்சர் இவ்வாறு கூறினார். ஆட்சிக்கு வந்த பிறகு தாலிபன்கள் ஆப்கானிஸ்தானில் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளைத் திறக்க அனுமதிக்கவில்லை.
 
"ஆப்கானிஸ்தானின் சமீபத்திய முடிவுகள் துரதிருஷ்டவசமானவை.இது மிகவும் ஏமாற்றமளிக்கும், பிற்போக்குத்தனமான முடிவு," என்று அவர் கூறினார்.
 
ஆகஸ்டு மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புக்கள் திரும்பப் பெறப்படுவதற்கும் முன்பிலிருந்தே, இந்த முழு விஷயத்திலும் கத்தாரின் பங்களிப்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது. தாலிபன்கள் ஆட்சியைக்கைபற்றிய பின்னர் காபூல் விமான நிலையத்தில் இருந்து ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் குடிமக்கள் மற்றும் ஆப்கன் குடிமக்களையும் கத்தார் வெளியேற்றியுள்ளது.
 
இந்தியாவில் இஸ்லாமியராக இருப்பது ஒரு குற்றமா? தொடர்ந்து தாக்கும் இந்து கும்பல்கள்
ஆப்கானிஸ்தானில் போருக்காக சுமார் 60 லட்சம் கோடி ரூபாய் செலவழித்த அமெரிக்கா
கத்தார், புதிய தாலிபன் அரசுடன் ஆக்கபூர்வமாக செயல்படுகிறது; அத்துடன் காபூல் விமான நிலையத்தை மீண்டும்திறக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
"நாம் அவர்களை தொடர்ந்து வலியுறுத்தி வரவேண்டும். இதுபோன்ற முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று நாம் அவர்களுக்கு சொல்ல வேண்டும். முஸ்லிம் நாடுகள் தங்கள் சொந்த சட்டதிட்டங்கள்படி எப்படி இயங்க முடியும் என்றும் பெண்கள் விஷயத்த்தில் எப்படி முடிவெடுக்கவேண்டும் என்றும் தாலிபன்களை புரிந்துகொள்ளச் செய்யவேண்டும்," என்று ஷேக் முகமது கூறினார்.
 
"இந்த விஷயத்தில் தாலிபன்கள் கத்தாரை உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். நாங்களும் ஒரு முஸ்லிம் நாடுதான். எங்கள் அமைப்பு முறையும் இஸ்லாம்தான். கத்தாரின் அரசு மற்றும் உயர் கல்வியில் ஆண்களை விட பெண்களே அதிகம்,"என்று அவர் குறிப்பிட்டார்.
 
சமீபத்திய வாரங்களில், தாலிபன்கள் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த வாரம் ஹெராட்டில் ஒரு தெருவில் சிலர் பகிரங்கமாக பொது இடத்தில் தூக்கிலிடப்பட்டனர்.
 
ஆட்சிக்கு வந்த பிறகு தாலிபன்கள்,சந்தேக நபர்களை தெருவில் பகிரங்கமாக தூக்கிலிடுவது தொடர்ந்து நடைபெறுகிறது. 1996 முதல் 2001 வரையிலான தங்கள் ஆட்சிமுறையை தாலிபன்கள் மீண்டும் கொண்டுவருவது போல தெரிகிறது என்று மக்கள் கூறுகிறார்கள்.
 
தாலிபன்கள் இஸ்லாமிய சட்டத்தை தங்களுக்கு ஏற்ற வகையில் விளக்குகிறார்கள்; கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். இது பெண்கள் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகிவிட்டபோதிலும் பெண்கள், மேல்நிலைப் பள்ளிகளுக்குச் செல்ல முடியவில்லை. பெண்கள் தங்கள் கோரிக்கைகளுடன் தெருக்களில் இறங்கியபோது, அந்தப் போராட்டமும் நசுக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளில் தாங்கள் பெற்ற முன்னிலையை தாலிபன்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஷேக் முகமது கூறினார்.
 
ஆட்சிக்கு வந்தபின் எடுத்த இந்த முடிவுகளால் தாலிபன்கள் அதை இழக்க நேரிடும் என்று ஷேக் முகமது எச்சரித்தார்.
 
சமீபத்திய வாரங்களில் தாலிபன்களில் நடந்துகொண்ட விதம் மிகவும் ஏமாற்றமளிக்கிறது என்று ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுக் கொள்கை தலைவர் ஜோசப் பொரேல், தெரிவித்தார். "ஆப்கானிஸ்தான் அரசை சரியான பாதையில் கொண்டு வர முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் கூறினார்.
 
பெண்ணுரிமை உள்ளிட்டவற்றில் தாலிபன்களின் நிலைப்பாடு குறித்து கத்தார் கவலை தெரிவிக்கிறது.
 
"தாலிபன்கள் தங்கள் நடவடிக்கைகளை மட்டுப்படுத்துவதை, தன் வலுவான செல்வாக்குடன் கத்தார் ஊக்குவிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

1990களின் பிற்பாதியில் தாலிபன்அமைப்பு முதன் முதலில் ஆட்சியைப் பிடித்தபோது, மூன்று நாடுகள் மட்டுமே அதனுடன் முறையான உறவுகளைக் கொண்டிருந்தன. அந்த நாடுகள் பாகிஸ்தான், செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை.
 
ஆனால் இந்த உறவுகள் 2001 செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்காவில் நடந்த தாக்குதல்களுக்குப் பிறகு முடிவடைந்தன. இருப்பினும், செளதி அரேபியாவைச் சேர்ந்த சிலர் பல ஆண்டுகள் ரகசியமாக நிதி அளித்துவந்தனர். தாலிபன்களை எந்த அதிகாரபூர்வ முறையிலும் ஆதரிக்கவில்லை என்று செளதி அதிகாரிகள் கூறி வருகின்றனர்.
 
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க துருப்புக்கள் இருப்பது அமெரிக்கர்களிடையே அதிருப்தி ஏற்படுத்திவந்த நிலையில், அங்கு வெளியுறவு ரீதியில் தங்கள் பங்களிப்பை செலுத்த விரும்பிய நாடுகளுக்கு காபூலின் பாதை திறந்தன. கத்தார் மற்றும் துருக்கி, தாலிபன்களுடன் தனித்தனி வழிகளில் தொடர்பு கொண்டன. ஆனால் உண்மையில் இதில் முக்கியத்துவம் பெற்றது கத்தார்தான்.
 
மூன்று தசாப்த கால முயற்சிக்குப் பிறகு தனது சுதந்திர வெளியுறவுக் கொள்கையை நிறுவ கத்தாருக்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்தது. புவியியல் அமைப்பில் இரானுக்கும் செளதி அரேபியாவுக்கும் இடையில் இருக்கும் ஒரு நாட்டிற்கு, இது முக்கியமானதாகும்.
 
தோஹா பேச்சுவார்த்தை இந்த ஆண்டின் தொடக்கம் வரை நீடித்தது. அமெரிக்காவும் தாலிபனும் ஓர் உடன்பாட்டை எட்டின. அமெரிக்கா ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுவதாக அறிவித்தது.
 
அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு ஜோ பைடன், துருப்புகளை முழுமையாக விலக்கி கொள்வதற்கான காலக்கெடுவை செப்டம்பர் 11 வரை நீட்டிப்பதாக அறிவித்தார்.
 
மத்திய கிழக்கில் பல பெரிய மோதல்களில் கத்தார் அரசு பல்வேறு பிரிவுகளுக்கு இடையே மத்தியஸ்தம் செய்திருக்கிறது. ஆனால் அரபு எழுச்சியின்போது சில வளைகுடா நாடுகள், இஸ்லாமியவாதிகளுக்கு ஆதரவாக கத்தார் இருப்பதாக குற்றம் சாட்டின.
 
2017ஆம் ஆண்டில், செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து மற்றும் பஹ்ரைன், தோஹாவுடனான உறவை முறித்துக் கொண்டன. இரானுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொண்டதாகவும், தனது செய்தி சேனல் அல்-ஜசீரா மூலம் உறுதியற்ற தன்மையை ஊக்குவிப்பதாகவும் கத்தார் மீது குற்றம் சாட்டப்பட்டது . இந்தக் குற்றச்சாட்டுகளை கத்தார் மறுத்தது.
 
இன்றைய ஆப்கானிஸ்தானில் கத்தார் மட்டுமே தாலிபன்களுடன் நேரடித் தொடர்பில் உள்ளது. இருப்பினும், சீனாவும் ரஷ்யாவும் ஆப்கானிஸ்தானின் எதிர்காலத்தில் தங்கள் வலுவான இருப்பை பராமரிக்க விரும்புகின்றன.
 
ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய சுமார் 43 ஆயிரம் பேர் தங்கள் நாடு வழியாக சென்றுள்ளனர் என்று கத்தார் கூறுகிறது. கத்தாரில் தற்போது ஆயிரக்கணக்கான ஆப்கன் அகதிகள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் 2022கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளுக்காக கட்டப்பட்ட இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா தடுப்பூசி போட்டால்தான் மதுபானம் !