Publish Date: Sun, 14 Nov 2021 (09:25 IST)
Updated Date: Sun, 14 Nov 2021 (09:28 IST)
ஸ்வீடனின் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பரவல் தொடர்ந்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களில் ஸ்வீடனில் கொரோனா பாதிப்புகள் வெகுவாக குறைந்துள்ளன. இந்நிலையில் கொரோனா இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தாலும் கொரோனா பரிசோதனை தேவையில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களில் ஸ்வீடனில் கொரோனா பரிசோதனைகள் வழக்கத்தை விட 30 சதவீதம் குறைந்துள்ளது. பல இடங்களில் இலவச கொரோனா பரிசோதனையும் நிறுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஸ்வீடனின் இந்த நடவடிக்கை ஆபத்தில் முடியலாம் என்றும் மருத்துவ நிபுணர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.