Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு: என்ன காரணம்?

144 section
, வியாழன், 11 மே 2023 (18:38 IST)
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று முதல் 14ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாஞ்சாலங்குறிச்சி என்ற பகுதியில் நாளை மற்றும் நாளை மறுநாள் வீரசக்கதேவி ஆலய திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவின்போது எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறக்க பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
இதனை அடுத்து தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் திருமணம், இறுதி சடங்கு ஆகிய ஊர்வலங்களுக்கு இந்த தடை பொருந்தாது. 
 
சுற்றுலா வாகனங்கள், சரக்கு வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றுக்கு தடை உத்தரவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளியூர் செல்பவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று தூத்துகுடி கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தி உள்ளார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூகுளின் ’’BARD AI ’’ என்ற செயலி அறிமுகம்