Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

9 மாதங்களுக்கு பின் பூமிக்கு திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்.. முதல்கட்ட மருத்துவ பரிசோதனை..!

Advertiesment
9 மாதங்களுக்கு பின் பூமிக்கு திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்.. முதல்கட்ட மருத்துவ பரிசோதனை..!

Siva

, புதன், 19 மார்ச் 2025 (06:59 IST)
விண்வெளியில் ஒன்பது மாதங்கள் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்பியதை அடுத்து, அவருக்கு முதல் கட்ட மருத்துவ பரிசோதனை நடத்துவதற்காக அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கடந்த 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ஸ் வில்மோர் ஆகிய இருவரையும் அழைத்து வர, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் சென்றது. அதன் மூலம் 17 மணி நேர பயணத்திற்கு பின்னர், சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
அமெரிக்காவின் ஃப்ளோரிடா கடற்பகுதியில் இறங்கிய விண்கலத்திலிருந்து, சுனிதா, அலெக்சாண்டர், புட்ச், நிக் ஹேக்,  ஆகிய நான்கு விண்வெளி வீரர்கள் பத்திரமாக வெளியே அழைத்து வரப்பட்டதாகவும், அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்ப வேண்டும் என்று, அவருடைய பூர்வீக நகரமான குஜராத் மாநிலத்தின் மெஹ்சானாவில் நேற்று கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றதாகவும், அந்த கிராமத்தில் உள்ள பலரும் அதில் கலந்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்த நிலையில், மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் சுனிதா வில்லியம்ஸ் செய்தியாளர்களை சந்தித்து தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ஒரே நாளில் 26 காசுகள் உயர்வு.. முழு விவரங்கள்..!