விண்வெளி மையத்தில் 9 மாதங்களாக சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ் இன்று பூமிக்கு திரும்பவுள்ள நிலையில் அதை லைவ் ஒளிபரப்பு செய்ய நாசா திட்டமிட்டுள்ளது.
இந்தியா வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் புட்ச் வில்மோருடன் சர்வதேசா விண்வெளி மையத்தில் ஆய்வு பணிக்காக சென்றபோது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்கேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
10 நாட்களில் பூமிக்கு திரும்ப வேண்டியவர்கள் கடந்த 9 மாதங்களாக விண்வெளி ஆய்வு மையத்திலேயே இருந்து வந்தனர். இந்நிலையில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற ட்ரம்ப், சுனிதா வில்லியம்ஸை மீட்கும் பொறுப்பை எலான் மஸ்க்கிடம் ஒப்படைத்தார்.
அதை தொடர்ந்து மஸ்க் உத்தரவின் பேரில் சுனிதா வில்லியம்ஸை மீட்க குழு அமைக்கப்பட்டு அவர்கள், குரு ட்ராகன் என்ற விண்கலம் மூலம் விண்வெளி மையத்தை சென்றடைந்தனர். அங்கிருந்து சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை இன்று அவர்கள் பூமிக்கு அழைத்து வருகின்றனர். அமெரிக்க நேரப்படி இன்று மாலை 5.57 மணிக்கு ப்ளோரிடா கடல் பகுதியில் விண்கலம் தரையிறங்கும் என கூறப்பட்டுள்ளது.
கடந்த 9 மாதங்களாக சுனிதா வில்லியம்ஸை மீட்பது குறித்த பேச்சு மக்களிடையே பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் பூமிக்கு திரும்புவதை லைவாக ஒளிபரப்பு செய்ய நாசா திட்டமிட்டுள்ளது. நாசாவின் யூட்யூப் சேனல் மற்றும் வலைதளத்தில் இந்த லைவ் ஒளிபரப்பை காணலாம் என கூறப்படுகிறது.
Edit by Prasanth.K