சூடான் அருகே பல்லாயிரக் கணக்கான ஆடுகளை ஏற்றி சென்ற கப்பல் கடலில் மூழ்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூடானின் சுவாகின் துறைமுகத்தில் இருந்து 15 ஆயிரம் ஆடுகளை ஏற்றிக் கொண்டு கப்பல் ஒன்று சவுதி அரேபியாவிற்கு புறப்பட்டுள்ளது. இந்த கப்பலில் ஏற்றக்கூடிய எடைக்கும் அதிகமான அளவில் ஆடுகளை ஏற்றியதாக கூறப்படுகிறது.
இதனால் புறப்பட்ட சில மணி நேரத்திலேயே கப்பல் கடலில் கவிழ்ந்தது. இந்த விபத்தின்போது அந்த கப்பலில் இருந்த பணியாளர்கள் பத்திரமாக வெளியேறிவிட்டனர். ஆனால் பல்லாயிர கணக்கான ஆடுகள் கப்பலோடு கடலில் மூழ்கி இறந்துள்ளன. 15 ஆயிரம் ஆடுகள் கடலில் இறந்துள்ளது கடலின் சுற்றுசூழலை பாதிக்கக்கூடும் என இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.