சூடானில் கடந்த அக்டோபர் மாதம் ராணுவம் புரட்சி செய்து ஆட்சியைக் கைப்பற்றினர்.
சூடானில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜனநாயக ஆட்சி நடந்துவந்த நிலையில் அக்டோபர் மாதம் அந்நாட்டின் ராணுவத் தளபதி அப்தில் ஃபட்டா அல் புர்ஹான் கிளர்ச்சி செய்தார். மேலும் சூடான் பிரதமர் அப்தல்லாவை சிறைபிடித்தனர். பின்னர் அவர்களுக்குள் நடந்த ஒப்பந்தத்தின் படி அப்தல்லாவே பிரதமராக நீடித்து வருகிறார்.
இந்நிலையில் ராணுவப் புரட்சிக்கு எதிராக இப்போது மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். ராணுவத்தினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த சண்டையில் போராட்டக்காரர்கள் இருவர் கொல்லப்பட்டனர். மக்கள் புரட்சியை எதிர்த்து பிரதமர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.