இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அதிபர் ஆட்சி முறையை ஒழிக்க எதிர்கட்சி மசோதா அளித்துள்ளது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்ஷேவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இலங்கையில் அதிபர் ஆட்சி முறையை ஒழிக்க வேண்டும் என எதிர்கட்சியான சமகி ஜன பலவேகயா அரசியல் சட்ட திருத்த மசோதாவை உருவாக்கியுள்ளது.
அதன்படி, இலங்கையில் அதிபர் ஆட்சி முறையை ஒழித்து, அதற்கு பதிலாக அரசியல் சட்ட ஜனநாயகத்தை வலுப்படுத்தும் ஜனநாயக ஆட்சி முறை அமல்படுத்தப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அவ்வாறு செய்தால் இலங்கையிலும் இந்தியா போலவே மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களது தலைமை அமைச்சராக பிரதமர் செயல்படும் நிலை ஏற்படும். இது அதிபரின் அதிகாரங்களை குறைக்கும் தன்னிச்சையான முடிவுகளை அதிபர் எடுப்பதை இது தடுக்கும்.