Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட போவதாக சரத் பொன்சேகா அறிவிப்பு..!

Advertiesment
sarath fonsekha

Mahendran

, வியாழன், 25 ஜூலை 2024 (12:50 IST)
இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட போவதாக சரத் பொன்சேகா தனது எக்ஸ் தளத்தில்  அறிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் தேர்தல் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இப்போதே அங்கு தேர்தல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கே பதவி காலம் நவம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளதால் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய அதிபராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் அதிபர் தேர்தலுக்கு போட்டியிட முடிவு செய்துள்ள நிலையில் அவரை எதிர்த்து போட்டியிடப் போவதாக முன்னாள் ராணுவ தலைமை தளபதி சரத் பொன்சேகா அறிவித்துள்ளார்.

 ஏற்கனவே மகிந்த ராஜபக்சே அதிபர் தேர்தலில் போட்டியிடும் கேட்டபோது அவருக்கு எதிராக பொன்சேகா  போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறை அவர் வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கடந்த 2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி காரணமாக மிகப்பெரிய புரட்சி வெடித்ததால் அப்போதைய அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார். அங்கிருந்து கொண்டே அவர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் அதன் பின்னர் தான் ரணில் விக்ரமசிங்க அதிபர் பொறுப்பை ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மத்திய பட்ஜெட்டிற்கு எதிர்ப்பு.. அனைத்து மாவட்ட தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டம்..