Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான் போட்டியிட்டு இருந்தால் வெற்றி பெற்றிருப்பேன்: கங்கனாவின் வெற்றிக்கு எதிராக வழக்கு..!

Advertiesment
நான் போட்டியிட்டு இருந்தால் வெற்றி பெற்றிருப்பேன்: கங்கனாவின் வெற்றிக்கு எதிராக வழக்கு..!

Mahendran

, வியாழன், 25 ஜூலை 2024 (11:04 IST)
நடிகை கங்கனா ரனாவத் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள மண்டி என்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் அந்த தொகுதியில் போட்டியிட வேட்ப மனு தாக்கல் செய்தவரின் மனு  நிராகரிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் கங்கனா ரனாவத் வெற்றியை எதிர்த்து நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதோடு நான் போட்டியிட்டு இருந்தால் கண்டிப்பாக வெற்றி பெற்று இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டி என்ற தொகுதியில் கங்கனா ரனாவத்போட்டியிட்டார் என்பதும் அவர் சுமார் 75 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இந்த தொகுதியில் லாயக் ராம் நெகி என்பவர் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. வனத்துறையில் ஓய்வு பெற்ற அலுவலரான அவர் குடிநீர், மின்வாரியம் உள்ளிட்ட துறைகளிடமிருந்து நிலுவையில்லா சான்றிதழ் சமர்ப்பிக்கப்படவில்லை என்று அவரது மனது நிராகரிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
 
ஆனால் ஒரு நாள் அவகாசம் கேட்டு அதற்குள் சான்றிதழை சமர்ப்பித்து விட்டதாகவும் இருப்பினும் நான் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டு விட்டதாகவும் நான் தேர்தலில் போட்டியிட்டு இருந்தால் வெற்றி பெற்று இருப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தேர்தல் ஆணையம் பதில் அளிக்கும் படி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தர்மபுரி தொடக்கப்பள்ளியில் பல்லி கிடந்த உணவை சாப்பிட்ட 19 மாணவர்கள்.. மருத்துவர்கள் சிகிச்சை..!