விண்வெளியில் விளைவிக்கப்பட்ட தக்காளி பூமிக்கு கொண்டுவரப்படும் என நாசா தெரிவித்துள்ளது.
விண்வெளியில் விளைவிக்கப்பட்ட தக்காளி பூமிக்கு கொண்டுவரப்படுகிறது என்றும் கடந்த ஆண்டு நிலவில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரி கொண்டு விண்வெளியில் தக்காளி உள்ளிட்ட பயிர்கள் விளைவிக்கப்பட்டது என்றும் நாசா மற்றும் ப்ளோரிடா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்தார்.
இந்த நிலையில் தற்போது விண்வெளியில் விளைவிக்கப்பட்ட தக்காளியை சிறப்பு விண்கலம் மூலம் பூமிக்கு கொண்டு வரப்பட இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. சுமார் 100 நாட்களுக்கு மேல் நான்கு விண்வெளியில் தக்காளி பயிர் செய்யப்பட்டுள்ளது என்றும் 100 நாட்களில் அந்த தக்காளி அறுவடை செய்யப்பட்டுள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது.
விண்வெளியில் விளைவிக்கப்பட்ட தக்காளியை பூமிக்கு கொண்டு வந்தவுடன் அதை பார்க்க அனைவரும் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது