உதகை மற்றும் குன்னூர் இடையே சிறப்பு மலை ரயில் இயக்கப்படுவதை அடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோடை காலம் துவங்கி உள்ளதை அடுத்து கொடைக்கானல் ஊட்டி ஆகிய பகுதிகளுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் கோடை சீசனை முன்னிட்டு சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என ரயில்வே துறை முடிவெடுத்துள்ளது.
நீலகிரி சிறப்பு மலை ரயில் சேவை நேற்று முதல் தொடங்கியதை அடுத்து காலை 8 10 மட்டுமே குன்னூரில் இருந்து உதவிக்கு 9 40 மணிக்கு வந்தடைந்தது. இந்த ரயிலில் 5 பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்ததாகவும் ஒரே நேரத்தில் 120 பயணிகள் பயணம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
இதேபோல் உதவியிலிருந்து மாலை 4.55 மணிக்கு புறப்பட்டு குன்னூருக்கு 5.55 மணிக்கு சென்றது. இந்த ரயிலில் பயணம் செய்ய முதல் கட்டணம் வகுப்புக்கு ரூபாய் 630 ரூபாய் இரண்டாம் ராயல் இரண்டாம் வகுப்பு கட்டணமாக 465 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது