150 அடி அகலம் கொண்ட விண்கல் ஒன்று பூமியை நெருங்கி வருவதாக நாசா எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் ஐந்து விண்கற்கள் பூமியை நெருங்கி வருவதாகவும் அதில் இரண்டு விண்கல் பூமிக்கு மிக அருகில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
2023FZ3 என்ற விண்கல் சுமார் 42 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் பூமியை கடந்து செல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 150 அடி அகலம் கொண்ட இந்த விண்கல் ஏப்ரல் ஆறாம் தேதி பூமியை நெருங்கி வருவதாக நாசா தெரிவித்திருந்தாலும் இந்த விண்கல்லால் பூமிக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை என்று தெரிவித்துள்ளது.