Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 வயது மகளை கண்களுக்காக விற்பனை செய்த தாய்.. வழக்கை விசாரித்த நீதிபதி அதிர்ச்சி..!

Mahendran
வியாழன், 29 மே 2025 (18:40 IST)
தென் ஆப்பிரிக்க தாய், தனது ஆறு வயது மகளை உடல் உறுப்புகளுக்காக விற்பனை செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
 
அந்த பெண் தனது மகளை சுமார் 1,100 அமெரிக்க டாலருக்கு விற்றதாகவும், குறிப்பாக “கண்கள் மற்றும் தோல்” ஆகியவற்றுக்காக அந்த சிறுமி விற்பனை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு 10 வருட சிறைத்தண்டனை அளித்து மனித வர்க்கத்தில் மிக மோசமான தாய் என்றும் கூறினார்.
 
35 வயது தாய் உட்பட குற்றஞ்சாட்டப்பட்டோர் தங்களுக்கான தண்டனையை நீதிபதி வாசித்தபோது எந்தவித உணர்ச்சியையும் வெளிப்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.
 
இந்த வழக்கு சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பணத்தால் மனிதர்களுக்கு ஏற்படும் நெருக்கடியில் குழந்தைகளை கூட கொடூரமாக விற்பனை செய்யப்படலாம் என்ற அதிர்ச்சிகரமான உண்மையை இந்த சம்பவம்  வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments