Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மருத்துவமனையில் குழந்தை கடத்தப்பட்டால் லைசென்ஸ் ரத்து: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை..!

Advertiesment
சுப்ரீம் கோர்ட்

Siva

, புதன், 16 ஏப்ரல் 2025 (07:19 IST)
மருத்துவமனையில் குழந்தை கடத்தப்பட்டால் மருத்துவமனையின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என சுப்ரீம் கோர்ட் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவமனையில் பிரசவத்திற்காக வரும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது மருத்துவமனையின்  நிர்வாகத்தின் பொறுப்பு என்றும் குழந்தை கடத்தலை தடுப்பதற்கான வழிமுறைகளை சுப்ரீம் கோர்ட் நேற்று வெளியிட்டது.  இந்த வழிமுறைகளை பின்பற்றாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை விடுத்தது.

மேலும் குழந்தைகளை பாதுகாப்பதில் பெற்றோரும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும், ஒரு குழந்தை இறந்தால் அதனால் பெற்றோருக்கு ஏற்படும் மனக்கவலை, துயரம் ஆகியவற்றை கூற வார்த்தைகள் இல்லை என்றும், ஆனால் அதே நேரத்தில் கடத்தல் கும்பலால் குழந்தை கடத்தப்படும் போது பெற்றோர் அடையும் பதட்டம் முற்றிலும் வேறுபட்டது என்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இது குறித்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், குழந்தை கடத்தலை செய்த குற்றவாளிகளுக்கு முன் ஜாமீன் வழங்கியதை ஏற்க முடியாது என்றும், உத்தரப் பிரதேசம் மாநில அரசு மேல்முறையீடு செய்யாததும் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் குழந்தை கடத்தல் தொடர்பான வழக்குகளை நீதிமன்றங்கள் ஆறு மாதத்தில் முடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மெரினா செல்லும் பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுமா? சென்னை மாநகராட்சி விளக்கம்..!