Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உயிரை கொடுத்து மகனை காப்பாற்றிய ரெஸ்லிங் வீரர் – அமெரிக்காவில் சோகம்!

Advertiesment
உயிரை கொடுத்து மகனை காப்பாற்றிய ரெஸ்லிங் வீரர் – அமெரிக்காவில் சோகம்!
, வியாழன், 21 மே 2020 (15:38 IST)
அமெரிக்காவின் பிரபல ரெஸ்லிங் வீரர் கடலில் சிக்கிய தன் மகனை காப்பாற்ற உயிரைவிட்ட சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா கட்டுப்பாடுகள் மெல்ல தளர்த்தப்பட்டு வரும் நிலையில் கலிபொர்னியா பகுதியில் உள்ள வெனிஸ் கடற்கரை திறக்கப்பட்டது. அமெரிக்காவின் ரெஸ்லிங் வீரரான ஷாட் காஸ்பார்ட் தனது 10 வயது மகனுடன் கடற்கரையில் குளிக்க சென்றுள்ளார்

அப்போது திடீரென கடலில் எழும்பிய் பெரிய அலைகள் காஸ்பார்ட்டையும் அவரது மகனையும் கடலுக்குள் இழுத்து சென்றது. இதை கண்ட கடற்கரை பாதுகாவலர்கள் உடனடியாக அவர்களை மீட்க முயற்சிகள் மேற்கொண்டனர். அவர்களை கடலிலிருந்து மீட்க முயற்சித்தபோது காஸ்பார்ட் மிகவும் எடை கொண்டவராக இருந்ததால் அவர்களை கரைக்கு இழுத்து செல்ல காவலர்கள் திணறியுள்ளனர். முதலில் தனது மகனை காப்பாற்றுமாறு காஸ்பார்ட் கூறவே அவர்கள் சிறுவனை மீட்டு கரை சேர்த்துள்ளனர். ஆனால் அதற்குள் காஸ்பார்ட் கடல் அலைகளில் மூழ்கி மறைந்தார். பல மணி நேரங்கள் தேடியும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை.

இந்நிலையில் நேற்று காலையில் அவரது உயிரற்ற உடல் கரை ஒதுங்கியுள்ளது. ஷாட் காஸ்பார் 2010 வரை ரெஸ்லிங்கில் இருந்தவர் பின்னர் திரைப்படங்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார். அவரது மறைவு அமெரிக்காவில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா வைரஸ் ஊரடங்கு: தமிழகத்தில் ஜூன் 1ஆம் தேதி கோயில்கள் திறக்கப்படுமா?