Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்னையவா ஏமாத்துற? காதலனுக்கு டன் கணக்கில் வெங்காயம் அனுப்பிய காதலி!

Advertiesment
என்னையவா ஏமாத்துற? காதலனுக்கு டன் கணக்கில் வெங்காயம் அனுப்பிய காதலி!
, புதன், 20 மே 2020 (14:41 IST)
தன்னை விட்டு பிரிந்த காதலனை பழி வாங்குவதற்காக காதலி ஒருவர் 1000 கிலோ வெங்காயத்தை அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்த சம்பவம் சீனாவில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஷாண்டோங் பகுதியை சேர்ந்த ஜாவோ என்ற பெண் நீண்ட நாட்களாக இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். சீன காதலர் தினத்தை அவரோடு சேர்ந்து கொண்டாட ஆவலாக இருந்த ஜாவோவுக்கு காத்திருந்தது அதிர்ச்சி. அந்த இளைஞர் ஜாவோவுடனான காதலை முறித்துக்  கொண்டுள்ளார்.

இதனால் மனமுடைந்த ஜாவோ மூன்று நாட்களுக்கும் மேலாக அழுதபடி இருந்துள்ளார். ஆனால் அந்த இளைஞரோ எந்த பிரச்சினையும் இல்லாதது போல இயல்பாக இருந்துள்ளார். இதுதெரிந்த ஜாவோ தனது காதலைனை பழிவாங்க எண்ணியுள்ளார். இதற்காக 1000 கிலோ வெங்காயத்தை தனது காதலனின் முகவரிக்கு ஆர்டர் செய்துள்ளார் ஜாவோ. வீட்டில் கொண்டு வந்து இறக்கப்பட்ட வெங்காயத்தில் ஒரு கடிதம் இருந்துள்ளது. அதில் “நம் காதலுக்காக பல நாட்களாக நான் அழுது விட்டேன். இப்போது உனது முறை” என்று எழுதப்பட்டிருக்கிறது.

வீட்டில் கிடக்கும் டன் கணக்கான வெங்காயத்தால் துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தார் புகார் அளித்து வரும் நிலையில் என்ன செய்வதென்று குழம்பி போயுள்ளாராம் காதலன்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இழுத்தடிக்கும் கிரண் பேடி: ஏமாந்து திரும்பும் மதுப்பிரியர்கள்!