Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

Advertiesment
Romulus and Remus

Prasanth Karthick

, செவ்வாய், 8 ஏப்ரல் 2025 (17:57 IST)

அமெரிக்க விஞ்ஞானிகள் 13 ஆயிரம் வருடங்கள் முன்பு வாழ்ந்து அழிந்த ஓநாய் இனத்தை உயிருடன் கொண்டு வந்திருப்பது பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

உலகில் பரிணாம வளர்ச்சியில் உருவாகி இயற்கை சூழல் உள்ளிட்ட பல காரணங்களால் அழிந்த பல உயிரினங்கள் உள்ளன. அவற்றில் டைனோசர்கள், மமோத் என்ற பெரிய யானைகள் என பல உயிரினங்கள் கிராபிக்ஸ் மூலமாக படங்களில் காட்டப்பட்டுள்ளன. அப்படியாக 13 ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் இந்த பூமியில் வாழ்ந்து அளிந்த இனம்தான் Dire Wolf எனப்படும் ஓநாய் இனம். பிரபல ஹாலிவுட் தொடரான கேம் ஆஃப் த்ரோன்ஸில் இந்த ஓநாய்கள் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.

 

இந்நிலையில் அமெரிக்காவின் டெக்சாஸை சேர்ந்த Colossal Biosciences என்ற ஒரு ஆய்வகம் அந்த டைர் ஓநாய்களை மீண்டும் உயிருடன் கொண்டு வந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அழிந்து போன டைர் ஓநாய்களின் எலும்பு போன்ற தடவியல் பொருட்களில் இருந்து அவற்றின் டிஎன்ஏ மாதிரிகள் உள்ளிட்டவற்றை எடுத்து அவற்றை டெஸ்ட் ட்யூப் முறையில் ஆய்வு செய்து ஓநாய்க்குட்டிகளை உருவாக்கியுள்ளனர். 

 

கடந்த 2024ம் ஆண்டு அக்டோபரில் இந்த செயல்முறையை அவர்கள் செய்திருந்த நிலையில் தற்போது அந்த டைர் ஓநாய்க்குட்டிகள் ஆரோக்கியமாக வளர்ந்துள்ள நிலையில் அதை பொதுவெளியில் அறிவித்துள்ளனர். உலக அளவில் அழிந்து போன ஒரு உயிரினத்தை ஆய்வகம் மூலமாக உயிருடன் கொண்டு வந்தது இதுவே முதல் முறையாகும். அந்த ஓநாய்களுக்கு ரெமுலஸ், ரீமஸ் என பெயரிட்டுள்ளனர். 

 

இதுபோல பல்வேறு காலக்கட்டங்களில் அழித்துபோன பறவைகள், விலங்குகளை மீண்டும் கொண்டு வர முடியும் என்பதால் இந்த பரிசோதனை மீது பலருக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திடீர் திருப்பம்.. டாஸ்மாக் வழக்கை திரும்ப பெற்றது திமுக அரசு.. என்ன காரணம்?