Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிரம்ப் வரிவிதிப்பு எதிரொலி: ஆசிய பங்குச்சந்தை எழுச்சி.. ஐரோப்பிய பங்குச்சந்தை வீழ்ச்சி..!

Advertiesment
பங்குசந்தை

Mahendran

, செவ்வாய், 8 ஏப்ரல் 2025 (11:01 IST)
இந்தியா, சீனா, கனடா உள்ளிட்ட ஒரு சில நாடுகளுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதித்துள்ள நிலையில், நேற்று பங்குச் சந்தை மிகப்பெரிய அளவில் சரிந்தது. ஆனால் இன்று இந்தியாவில் பங்குச் சந்தைகள் எழுச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்திய பங்குச் சந்தை, ஜப்பான் பங்குச் சந்தை, ஹாங்காங் பங்குச் சந்தை ஆகியவை இன்று காலை முதல் எழுச்சியுடன் விற்பனையாகி வருகின்றன. ஆனால் அதே நேரத்தில் ஐரோப்பிய பங்குச் சந்தை இன்னும் வீழ்ச்சியிலிருந்து எழவில்லை.
 
லண்டன் மற்றும் பாரீஸ் பங்குச் சந்தைகள் மிக மோசமாக சரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், அமெரிக்க பங்குச் சந்தையும் மிகவும் மோசமான சூழ்நிலையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரி விதிப்பு முறையை திரும்ப பெறத் திட்டவட்டமாக மறுத்துள்ளதாகவும், இதனால் வர்த்தக போர் நீடித்தே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
"சில நேரங்களில் நோய்களை கட்டுப்படுத்த கசப்பான மருந்தை உட்கொள்ள வேண்டியிருக்கும்; அதுபோலவே இந்த பங்குச் சந்தை நிலவரமும் என்று கூறிய டிரம்ப் கூடுதல் வரி அவசியம்" என  தெரிவித்ததாகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக தேர்தல் வாக்குறுதி எண் 503 என்ன ஆச்சு? சிலிண்டர் விலை குறித்து முதல்வருக்கு அண்ணாமலை பதிலடி..!