Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பள்ளி மீது குண்டுவீச்சு.. 22 பிஞ்சுகள் பரிதாப பலி! சொந்த மக்களையே கொன்று குவிக்கும் மியான்மர் ராணுவம்!

Advertiesment
Myanmar School

Prasanth Karthick

, செவ்வாய், 13 மே 2025 (08:49 IST)

மியான்மரில் ராணுவம் நடத்திய தாக்குதலில் பள்ளிக் கட்டிடத்தின் மீது குண்டு வீசப்பட்டு 22 மாணவர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மியான்மரில் ராணுவ சர்வாதிகார ஆட்சி நடந்து வரும் நிலையில், அதற்கு எதிராக மக்கள் கிளர்ச்சி இயக்கங்களும் ஆங்காங்கே செயல்பட்டு வருகின்றன. முக்கியமாக ராணுவ ஆட்சிக்கு எதிராக செயல்பட்டு வரும் ஜனநாயக ஆதரவு கிளர்ச்சி இயக்கத்தை குறிவைத்து மியான்மர் ராணுவம் அவ்வப்போது தாக்கி வருகிறது.

 

இந்நிலையில் மியான்மரின் சகாயிங் என்ற பகுதியில் உள்ள கிராமத்தில் மாணவர்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது மியான்மர் ராணுவம் அங்கு குண்டு வீசியுள்ளது. இந்த தாக்குதலில் 22 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் பரிதாபமாக பலியானார்கள். மியான்மர் ராணுவம் இந்த தாக்குதலை ஒத்துக் கொள்ளாத நிலையில், சுயாதீன பத்திரிக்கைகளும், உள்ளூர் மக்களும் ராணுவம் தாக்கியதை உறுதிப்படுத்துகின்றனர்.

 

மியான்மர் ராணுவத்தின் இந்த தாக்குதலை எதிர்கட்சியான NUG கண்டித்துள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடவுள் ராமர் என்பது ஒரு கற்பனை கதை.. சர்ச்சை கருத்து தெரிவித்த ராகுல் காந்தி மீது வழக்கு..!