ஆப்கானிஸ்தானில் நடைபெறும் தாலிபான் அரசு ஏற்கனவே விளையாட்டு போட்டிகளில் பெண்கள் கலந்து கொண்ட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது செஸ் போட்டி தடை செய்யப்படுவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து ஆப்கானிஸ்தான் நாட்டின் விளையாட்டு இயக்குனரக செய்தி தொடர்பாளர் கூறிய போது இஸ்லாமிய ஷரியாவின் படி செஸ் விளையாட்டு என்பது சூதாட்டத்தின் ஒரு வழிமுறையாக கருதப்படுகிறது எனவே நாட்டின் தன்மையை ஊக்குவித்தல் மற்றும் தீமையை தடுப்பதற்கான சட்டத்தின் படி செஸ் விளையாட்டு ஆப்கானிஸ்தானில் தடை செய்யப்படுகிறது.
செஸ் விளையாட்டிற்கு மதரீதியான எதிர்ப்புகள் உள்ள நிலையில் அது பேசி தீர்க்கப்படும் வரை இந்த விளையாட்டு தடை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த முடிவுக்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
செஸ் விளையாட்டில் எந்தவிதமான சூதாட்டமும் இல்லை என்றும் தாலிபான் அரசு இந்த தடையை நீக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். ஏற்கனவே பெண்கள் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள தடை விதித்த தாலிபன் அரசு தற்போது செஸ் விளையாட்டிற்கும் தடை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.