Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பனியில் சிக்கிய சிறுமி: 18 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்பு!

பனியில் சிக்கிய சிறுமி: 18 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்பு!
, வியாழன், 16 ஜனவரி 2020 (15:02 IST)
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பனியில் சிக்கிய சிறுமியை 18 மணி நேரம் கழித்து உயிருடன் காப்பாற்றியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மற்றும் எல்லைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக அதிகமாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. அதிகமான பனிப்பொழிவால் பல இடங்களில் பனிச்சரிவு ஏற்பட்டு பலர் இறந்து போகும் சம்பவங்களும் தொடர்ந்து வருகின்றன. ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான நீலம் பள்ளதாக்கு வரலாறு காணாத பனிப்பொழிவை சந்தித்து வருகிறது. இதனால் ஏற்படும் பனிச்சரிவால் இதுவரை 100 பேர் வரை பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் வீடு இடிந்து விழுந்ததில் 12 வயது சிறுமி சமீனா பீபி சிக்கிக் கொண்டார். பாகிஸ்தான் பேரிடர் மீட்பு ப்டையின் உதவியுடன் நடத்தப்பட்ட மீட்பு நடவடிக்கையில் அந்த பெண் கண்டெடுக்கப்பட்டார். பனிக்கட்டிகள் விழுந்து கால் உடைந்த நிலையில் குளிர் தாளாமல் மூக்கிலிருந்து ரத்தம் வெளியேறிய நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சிறுமி சமீனா.

தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் உயிர் பிழைத்த நிலையில் அவருடைய சகோதர – சகோதரிகள் இந்த விபத்தில் இறந்து விட்டனர். கடுமையான பனிப்பொழிவால் நீலம் பள்ளத்தாக்கில் 74 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மக்கள் பலர் அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

40% ஆமைகளுக்கு டாடி: 100 வயதில் ரிடையர் ஆன ஆமை டீகோ!