Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பனிப்பொழிவில் சிக்கி 25 பேர் பலி..

பனிப்பொழிவில் சிக்கி 25 பேர் பலி..

Arun Prasath

, திங்கள், 13 ஜனவரி 2020 (18:02 IST)
பாகிஸ்தானில் கடுமையான பனி பெய்து வரும் நிலையில் பனிப்பொழிவில் சிக்கி 25 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தானில் கடுமையான பனிப்பொழிவு பெய்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானில் மட்டும் 25 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக பலூசிஸ்தான் மாகாணத்தில் தென்மேற்கு பகுதியில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே போல் ஆஃப்கானிஸ்தானில் 18 பேர் பனிப்பொழிவில் சிக்கி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இரு நாடுகளிலும் சாலைகளில் பனி அதிக அளவில் நிறைந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக உள்ளதாக தெரியவருகிறது. மேலும் பனிப்பொழிவால் குவாட்டா நகரில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நெல்லை தமிழின் எல்லை அறியாதவர்களால் தொல்லை - நெல்லை கண்ணன் !