Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

40% ஆமைகளுக்கு டாடி: 100 வயதில் ரிடையர் ஆன ஆமை டீகோ!

Advertiesment
40% ஆமைகளுக்கு டாடி: 100 வயதில் ரிடையர் ஆன ஆமை டீகோ!
, வியாழன், 16 ஜனவரி 2020 (14:52 IST)
அதீத பாலுணர்வு மிக்க டீகோ என்ற ஆண் ஆமை, தன் இனத்தை அழியாமல் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு சுமார் 800 குஞ்சுகளை உருவாக்கிய பிறகு தற்போது தனது 100-வது வயதில் தன் சொந்தக் காடுக்கு திரும்புகிறது.
 
கிராண்ட் டார்ட்டாய்ஸ் எனப்படும் நில ஆமை வகையைச் சேர்ந்த டீகோவின் பூர்வீகம் அமெரிக்க கண்டத்தில், ஈக்வடார் தீவில் உள்ள கோலபாகோஸ் தீவுகள். சாந்தா குரூஸ் தீவில் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் திட்டத்துக்காக 1960களில் தேர்வு செய்யப்பட்ட 14 ஆண் ஆமைகளில் டீகோவும் ஒன்று.
 
இந்த இனப்பெருக்கத் திட்டத்தின் கீழ் 2000 தரை ஆமைகள் உருவாக்கப்பட்டு அந்த இனம் அழிவில் இருந்து மீட்கப்பட்டது. இந்த வெற்றியில் டீகோவின் அதீத பாலுணர்வுக்கு முக்கியப் பங்கு இருப்பதாகப் பாராட்டப்பட்டது.
 
டீகோ நூற்றுக்கணக்கான வாரிசுகளை உருவாக்கியது. சில கணக்குகளின்படி அந்த எண்ணிக்கை சுமார் 800. இந்தத் திட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து, டீகோ தமது பூர்வீகத் தீவான கோலபாகோஸ் தீவுக் கூட்டத்தின் எஸ்பனோலா தீவுக்கு இந்த ஆண்டு திரும்பும் என்று கேலபாகோஸ் தேசியப் பூங்கா சேவை தெரிவித்துள்ளது.
 
1,800 ஆமைகள் கொண்டதாக அதன் சமூகம் அங்கே வலுவானதாக இருக்கிறது. இவற்றில் குறைந்தது 40 சதவீத ஆமைகளுக்கு டீகோதான் தந்தை என்கிறார்கள் தேசியப்பூங்காவின் வனச்சரகர்கள்.
 
50 ஆண்டுகளுக்கு முன்பு எஸ்பனோலாவில் டீகோவின் இனத்தில் இரண்டு ஆண் ஆமைகளும், 12 பெண் ஆமைகளும் மட்டுமே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக பாஜக தலைவர் அறிவிப்பு எப்போது? பரபரப்பு தகவல்!