உக்ரைன் நாட்டின் போருக்காக அதிபர் புதனின் அறிவுரைப்படி நிதி உதவி திரட்டிய பெண் அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளன.
உக்ரைன் உடனான ரஷ்ய போரின் காரணமாக ரஷ்யாவுக்கு அதிக செலவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக புதின் நிதி தொடர்பான திட்டங்களை அறிவித்த நிலையில் அந்த திட்டங்களை செயல்படுத்தி வந்த பெண் அதிகாரி மரினா என்பவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
இவர் தான் தங்கி இருந்த கட்டிடத்தின் 16-வது மாடியில் இருந்து கீழே விழுந்ததாகவும் இதனை அடுத்து உடனடியாக அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரஷ்ய அதிபர் புதினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜெனரல் மகாராவ் என்பவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது மேலும் ஒரு அதிகாரி தற்கொலை செய்து கொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.