உக்ரைன் – ரஷ்யா போரில் உக்ரைனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த மாணவி கைது செய்யப்பட்டுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்து ஒரு ஆண்டிற்கும் மேல் ஆகிவிட்டது. தொடர்ந்து போர் நடந்து வரும் நிலையில் ரஷ்யாவின் நிலைபாட்டை ரஷ்யர்களே பலர் எதிர்த்து வருகின்றனர். அவ்வாறாக எதிர்ப்பு தெரிவிப்பவர்களை ரஷ்யா இரும்புகரம் கொண்டு அடக்கி வருகிறது.
இந்நிலையில் ரஷ்யாவின் ஆர்க்காங்கெல்ஸ்க் நகரத்தை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி ஒலேஸ்யா என்பவர் ரஷ்யாவின் நிலைபாட்டை கடுமையாக விமர்சித்து வந்துள்ளார். உக்ரைனுக்கு ஆதரவாகவும், ரஷ்யாவை எதிர்த்தும் அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்ததால் அவரை ரஷ்ய அரசு வீட்டு சிறையில் வைத்துள்ளது.
அவரது காலில் எலக்ட்ரானிக் டேக் பொருத்தி அவரது நடவடிக்கைகளை கண்காணிக்கின்றனர். மேலும் வீட்டு சிறையில் உள்ள அவர் சமூக வலைதளங்களை பயன்படுத்தவும், செல்போன் பேசவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்திற்கு ஆதரவாக செயல்படுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டு அவர் மீது பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.