Publish Date: Tue, 14 Feb 2023 (12:07 IST)
Updated Date: Tue, 14 Feb 2023 (12:08 IST)
சென்னை ஐஐடி வளாகத்தில் அவ்வப்போது மர்மமான தற்கொலைகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு மாணவர் தூக்கில் தொங்கிய தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஐஐடியில் இரண்டாம் ஆண்டு முதுநிலை ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் ஸ்ரீவன் சன்னி என்ற மாணவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இவர், படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியாததால் மன அழுத்தம் காரணமாக கடந்த சில நாட்களாக சோகமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் மற்றொரு மாணவரும் தற்கொலைக்கு முயன்ற நிலையில் அந்த மாணவர் சரியான நேரத்தில் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
சென்னை ஐஐடியில் மன உளைச்சலில் இருக்கும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.