Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஷ்யா – உக்ரைன் நாடுகள் இடையேயான பேச்சுவார்த்தை தொடக்கம் !

Advertiesment
ரஷ்யா – உக்ரைன் நாடுகள்  இடையேயான பேச்சுவார்த்தை தொடக்கம் !
, திங்கள், 28 பிப்ரவரி 2022 (16:14 IST)
ரஷ்யா – உக்ரைன் நாடுகள்  இடையேயான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து அந்நாட்டின் மீது குண்டுமழை பொழிந்து கொண்டிருக்கிறது. உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ படைகள் களத்தில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ரஷ்யாவின் இந்த படையெடுப்பை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் எதிர்த்துள்ள சீனா மற்றும் பாகிஸ்தான், கியூபா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் ரஷ்யாவுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஐ நாவில் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்தது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 11 நாடுகள் வாக்களித்தன. இந்த வாக்கெடுப்பில் இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. ரஷ்யா தன்னுடைய வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த தீர்மானத்தை தோல்வி அடையச் செய்துள்ளது.

 இ ந் நிலையில், உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான  ரஷ்யா – உக்ரைன் இடையேயான பேச்சுவார்த்தை தற்போது பெலாரஸில் தொடங்கியுள்ளது. இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்படுமா என உலகமே எதிர்பார்த்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை நீதிமன்றக் காவலில் அடைத்து நீதிமன்றம் உத்தரவு