Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஷ்ய பிரதமர் திடீர் ராஜினாமா –புதினிடம் கடிதம் !

Advertiesment
ரஷ்ய பிரதமர் திடீர் ராஜினாமா  –புதினிடம் கடிதம் !
, வியாழன், 16 ஜனவரி 2020 (09:10 IST)
ரஷ்யாவின் பிரதமர் திமித்ரி மெத்வதேவ் இன்று திடீர் ராஜினாமா செய்துள்ளார்.

ரஷ்யாவின் பிரதமராக திமித்ரி மெத்வதேவ் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் இன்று திடீரென்று ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை அவர் அதிபர் புதினிடம் ஒப்படைத்துள்ளார். திமித்ரியின் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட புதின் புதிய அமைச்சரவை அமைக்குவரை அவரையே பிரதமராக செயல்பட சொல்லியுள்ளார்.

பிரதமரின் கோரிக்கைகளை அதிபர் புதின் நிறைவேற்ற தவறியாதாலேயே அவர் ராஜினாமா செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லெஸ்பியன்களே அதிகம்! ஓரினச்சேர்க்கை திருமனங்களில் விவாகரத்து !