Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடுத்த டார்கெட் இந்தியா? முக்கிய புள்ளி வெளியிட்ட முக்கிய தகவல்!

Advertiesment
அடுத்த டார்கெட் இந்தியா? முக்கிய புள்ளி வெளியிட்ட முக்கிய தகவல்!
, சனி, 11 ஜனவரி 2020 (15:12 IST)
இந்தியாவின் ராணுவ வலிமையை குறைக்க டிரம்ப் விரும்பவில்லை என அந்நாட்டு பாதுகாப்பு உயரதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். 
 
சமீபத்தில் அனைத்து நாடுகளும் ரஷ்யாவிடம் இருந்து ராணுவ தளவாடங்களை வாங்குவதற்கு அமெரிக்கா தடை விதித்தது. இதனை மீறி செயல்படும் நாடுகள் மீது கடுமையான பொருளாதார தடை விதிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.  
 
இந்நிலையில் இந்தியா, ரஷ்யாவிடம் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், எஸ் 400 ரக ஏவுகணைகளை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இது இந்திய - அமெரிக்காவிற்கு இடையேயான நல்லுரவை முறிக்க கூடும் என தெரிகிறது. 
 
இது குறித்து, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சக உயரதிகாரி ஒருவர் கூறியதாவது, ரஷ்யாவிடமிருந்து எஸ் 400 ரக ஏவுகணைகளை வாங்குவதன் மூலம், அமெரிக்காவிடமிருந்து எப்-35 ரக போர் விமானங்கள் இந்தியாவுக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.
 
இந்தியா - அமெரிக்கா இடையேயான ராணுவ ரீதியிலான வர்த்தக உறவில் கடந்த 15 ஆண்டுகளாக நல்ல முன்னேற்றம் இருக்கிறது. அதேசமயத்தில், இந்த விவகாரத்தில் இந்தியாவின் ராணுவ வலிமையை குறைக்கும் விதமான எந்த முடிவையும் எடுக்க அதிபர் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் விரும்பவில்லை என தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

30 பெண்களுக்கு ஆபாச மெஸேஜ் ! சென்னையில் இருந்த தென்காசி நபர் – போலிஸ் விசாரணையில் பகீர் தகவல் !