உக்ரைன் நாடு நோட்டாவில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த நான்கு வருடங்களாகவே ரஷ்யா அந்த நாட்டின் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இந்தப் போரால் உக்கரையில் வசிக்கும் பொது மக்களும், ராணுவ வீரர்களும் லட்சக்கணக்கில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.. லட்சக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்து விட்டனர். ஒருபக்கம் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
இதுதொடர்பான பேச்சு வார்த்தைகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடத்தி வருகிறார்.. ஆனாலும் போர் நின்றபாடில்லை.. இன்னும் சொல்லப்போனால் தற்போது போரை ரஷ்யா தீவிரப்படுத்திருக்கிறது. உக்கரைனில் கார்கீவ் நகருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது ரஷ்ய ட்ரோன்கள் திடீர் தாக்குதலை நடத்தின.
நேற்று இரவு நடந்த இந்த தாக்குதலில் சில ரயில் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தது.. அந்த ரயிலில் சுமார் 200 பேர் பயணித்தார்கள்.. ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் 5 பயணிகள் உயிரிழந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.. பலரும் காயம்டைந்துள்ளனர். தற்போது அங்கு மீட்பு பணி நடந்து வருகிறது..இரண்டு குழந்தைகள் உட்பட பலரும் காயமடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.