Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஈரான் மக்களே!.. அடிக்கறவன் பேர நோட் பண்ணி வச்சிக்கோங்க!.. அமெரிக்க அதிபர் ஆவேசம்!..

Advertiesment
trumph

Mahendran

, புதன், 14 ஜனவரி 2026 (09:27 IST)
ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. அதோடு அரசியல் குழப்பம், வேலை வாய்ப்பு இல்லாத சூழ்நிலை என பல விஷயங்கள் அந்நாட்டு மக்களை கோபப்படுத்த கடந்த சில நாட்களாகவே ஈரான் அரசுக்கு எதிராக சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்த தொடங்கிவிட்டனர்.

முதலில் இரண்டு மாகாணங்களில் தொடங்கிய போராட்டம் தற்பொழுது 31 வாகனங்களில் பரவியிருக்கிறது, போராட்டம் செய்பவர்களை ஒடுக்குவதற்காக அரசு பாதுகாப்பு படையினரை அனுப்ப அவர்கள் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தில் இதுவரை 2 ஆயிரம் இறந்திருக்கிறார்கள்.

போராட்டம் பரவுவதை தடுப்பதற்காக ஈரானில் இணையதள சேவை  துண்டிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் ’ஈரானின் தேச பக்தர்களே.. தொடர்ந்து போராடுங்கள்.. உங்கள் நாட்டின் அமைப்புகளை கைப்பற்றுங்கள்.. கொலையாளிகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்தவர்களின் பெயர்களை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.. அவர்கள் பெரிய விலையை கொடுக்கப் போகிறார்கள்.. போராட்டக்காரர்கள் கண்மூடித்தனமாக கொல்லப்படுவது நிறுத்தப்படும் வரை ஈரானிய அதிகாரிகளுடன் அனைத்து சந்திப்புகளையும் நான் ரத்து செய்து விட்டேன்.. உதவி உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறது’ என தெரிவித்திருக்கிறார்.

ஈரானின்ல்நிலைமை இப்படியே கட்டுக்கடங்காமல் போனால் அமெரிக்க படையினர் உள்ளே புகுந்து தங்களின் கட்டுப்பாட்டில் அரசை கொண்டு வாருங்கள் என தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காலை வெட்டுவீங்களா?!.. இது ரொம்ப தப்புங்க!.. அண்ணாமலைக்கு ஆதரவாக சீமான் கருத்து!....