Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுவாச குழாயில் தொற்று; தீவிர சிகிச்சையில் போப் பிரான்சிஸ்! - சிறப்பு பிரார்த்தனை செய்யும் மக்கள்!

Advertiesment
Pope Francis

Prasanth Karthick

, செவ்வாய், 18 பிப்ரவரி 2025 (09:33 IST)

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நலம் பெற வேண்டி பலரும் தேவாலயங்களில் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

 

உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவராக இருந்து வருபவர் 88 வயதான போப் பிரான்சிஸ். கடந்த 2023ம் ஆண்டில் நிம்மோனியாவால் பாதிக்கப்பட்ட போப் பிரான்சிஸ் மருத்துவ சிகிச்சை தொடர்ந்து பெற்று வந்த நிலையில் கடந்த வாரம் உடல்நிலை கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

அங்கு அவரை பரிசோதித்ததில் அவருக்கு சுவாச குழாயில் வைரஸ், பாக்டீரியா, பூசை உள்ளிட்ட பலவகையான தொற்றுகள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவகள் தெரிவித்துள்ளனர். இதனால் அவருக்கு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போப் பிரான்சிஸ் நலம்பெற வேண்டி கத்தோலிக்க தேவாலயங்களில் கிறிஸ்தவ மக்கள் சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்நிலையில் வாட்டிகன் வெளியிட்டுள்ள தகவலில், போப் பத்திரிக்கை வாசிப்பது உள்ளிட்ட அன்றாட பணிகள் சிலவற்றை செய்வதாகவும், அவரது உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அவரது உடல்நலனை கருத்தில் கொண்டு மார்ச் 5 வரை போப்பின் அனைத்து நிகழ்ச்சி திட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுகவை வெற்றி பெற வைப்பதற்கான ரகசியம் என்னிடம் உள்ளது: ஓபிஎஸ்