அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் சாலை ஓரமாக நின்ற கண்டெய்னர் லாரியில் இருந்து 40 பிணங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் தெற்கே உள்ள மெக்சிகோ நாட்டிலிருந்து மக்கள் பலர் அகதிகளாக அமெரிக்காவிற்குள் நுழையும் சம்பவங்கள் தினம்தோறும் நடந்து வருகிறது. அகதிகள் நுழைவதை தடுக்க பல்வேறு நடைமுறைகள் உள்ள நிலையில் அகதிகளாக மக்கள் பலர் கண்டெய்னரில் ஒளிந்து கொண்டு பயணிக்கின்றனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சாலை ஓரமாக சந்தேகத்திற்கு இடமாக ஒரு கண்டெய்னர் நின்றுள்ளது. அதை போலீஸார் சோதனை செய்தபோது அதில் 40 பிணங்களை கண்டெடுத்துள்ளனர். மேலும் 18 பேருக்கு உயிர் இருந்த நிலையில் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மெக்சிகோவில் இருந்து அகதிகளை அழைத்துக் கொண்டு வந்த கண்டெய்னர் அடுத்து எங்கே செல்வது என தெரியாத நிலையில் டிரைவர் வண்டியை நிறுத்தி விட்டு தப்பி இருக்கலாம் என்றும், அதீத வெப்பம், மூச்சுத்திணறல் காரணமாக அகதிகள் இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.