Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தி வாரியர் படத்தில் வைரல் ஹிட்டான ‘புல்லட்’ பாடல்… அடுத்து ‘விசில்’ பாட்டு ரிலீஸ் அப்டேட்

தி வாரியர் படத்தில் வைரல் ஹிட்டான ‘புல்லட்’ பாடல்… அடுத்து ‘விசில்’ பாட்டு ரிலீஸ் அப்டேட்
, செவ்வாய், 21 ஜூன் 2022 (09:09 IST)
ராம் பொத்தினேனி நடிப்பில் லிங்குசாமி இயக்கும் புதிய படத்துக்கு தி வாரியர் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு சண்டக்கோழி 2 என்ற படத்தை இயக்கிய லிங்குசாமி அதன்பின் நான்கு ஆண்டுகள் கழித்து இயக்கி வரும் திரைப்படம் ‘தி வாரியர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படம் ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை நடிகர் சிம்பு தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலுமே அந்த பாடலை சிம்புவே பாடியுள்ளார். புல்லட் என்று இந்த பாடல் சமீபத்தில் ரிலீஸாகி வைரல் ஹிட்டானது. அதிகளவில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்கள் ரசிகர்களால் உருவாக்கப்பட்டு பகிரப்பட்டன. இந்நிலையில் தற்போது அந்த படத்தில் இடம்பெறும் மற்றொரு பாடலான ‘விசில்’ பாடல் நாளை (ஜூன் 22) ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
 
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘அரபிக்குத்து’ வைரல் ஹிட்டுக்குப் பி்ன்… ‘பிரின்ஸ்’ படத்தில் பாடல் எழுதும் சிவகார்த்திகேயன்