Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்ரேலுக்கு எதிராக என்னால் நடவடிக்கை எடுக்க முடியாது: புதின் போட புதுகுண்டு..!

Mahendran
திங்கள், 23 ஜூன் 2025 (11:45 IST)
ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய பின்னரும், ஈரானுக்கு ரஷ்யா ஏன் நேரடியாக வரவில்லை என்பதை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விளக்கியுள்ளார்.
 
ரஷ்யாவுக்கும் ஈரானுக்கும் இடையே பல ஆண்டுகளாக நெருங்கிய உறவுகள் இருந்தபோதிலும், இஸ்ரேலில் அதிக எண்ணிக்கையிலான ரஷ்ய மொழி பேசும் மக்கள் வசிப்பதால், இந்த மோதலில் நடுநிலை வகிக்க தான் முயற்சிப்பதாக புடின் கூறினார்.
 
முன்னாள் சோவியத் யூனியன் மற்றும் ரஷ்ய கூட்டமைப்பிலிருந்து கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் மக்கள் இஸ்ரேலில் வசிக்கின்றனர் என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். இன்று அது கிட்டத்தட்ட ரஷ்ய மொழி பேசும் நாடாக உள்ளது. இதை ரஷ்யாவின் தற்கால வரலாற்றில் நாங்கள் எப்போதும் கணக்கில் எடுத்துக்கொள்கிறோம்," என்று தெரிவித்தார்.
 
ரஷ்யா தனது நட்பு நாடுகளிடம் விசுவாசமாக இல்லை என்று கேள்வி எழுப்பிய விமர்சகர்களையும் புடின் கடுமையாக சாடினார். இவ்வாறு சொல்பவரக்ளை தூண்டி விடுபவர்கள் என்று அழைத்த புதின், அரபு நாடுகள் மற்றும் இஸ்லாமிய நாடுகளுடன் ரஷ்யாவின் உறவுகள் நீண்ட காலமாக நட்புடன் இருந்து வருவதாகவும், ரஷ்யாவின் மக்கள் தொகையில் 15 சதவீதம் முஸ்லிம்கள் என்பதை வலியுறுத்தினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு வீண் வாக்குவாதத்தால் பகை ஏற்படலாம்! இன்றைய ராசி பலன்கள் (20.08.2025)!

மெட்ரோவில் சூட்கேஸ் கொண்டு சென்ற பயணிக்கு கூடுதல் கட்டணம்.. அதிர்ச்சி தகவல்..!

தெருநாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்.. டெல்லியில் பரபரப்பு..!

நிர்மலா சீதாராமனை திடீரென சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

மகாராஷ்டிரா தேர்தலை ரத்து செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments