Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிபர் ட்ரம்ப் சீனாவை கண்டு பம்முகிறாரா...? பாய்கிறாரா...?

அதிபர் ட்ரம்ப் சீனாவை கண்டு பம்முகிறாரா...? பாய்கிறாரா...?
, வியாழன், 27 செப்டம்பர் 2018 (18:27 IST)
சமீப காலமாக அமெரிக்க ,சீன தேசங்களிடையே எழுந்துள்ள வர்த்தகப் போரானது உலக அளவில் பெரும் பொருளாதார அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கபட்டவரது நான்காண்டு அட்சியில் இரண்டாண்டுகள் முடிந்த பிறகு அங்குள்ள மாகாணங்களில் ஆளுநர்கள்.நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறு அதிகாரிகள் போன்றோர் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம்.
 
டிரம்ப் ஆட்சியிலும் இந்த இடைத்தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 6ஆம் தேதியில் தொடங்க இருக்கிறது.
 
இந்த நிலையில் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கிவரும் அணுஆயுதம்,ரசாயனம், உயிரிய ஆயுதங்கள்  போன்றவற்றை எதிர்கொள்வது சம்பந்தமாக, ஐ .நா சபையில் நடந்த பாதுகாப்பு மண்டல கூட்டத்தில் அதிபர் டிரம்ப் கூறியுள்ளதாவது:
webdunia

வல்லரசான அமெரிக்க தேசத்தில் நடக்கப்போகிற இடைத்தேர்தலில் சீனாவின் குறுக்கீடு இருக்க போவதாக  தெரிகிறது என்று குற்றம் சாட்டியிருந்தார்.
 
மேலும் அவர் கூறுகையில் அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப் போரில் சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முதல் ஆள் நான்தான். இந்த வர்த்தகப் போரில் சீன தேசத்தின் மீது நான் வரிவிதிப்பதனால் வரும் இடைத்தேர்தலில் என்னையோ எங்கள் கட்சியையோ தோற்கடிக்க இருக்கிறார்கள்.  என்ன இருந்தாலும் வர்த்தகப் போர் உட்பட அனைத்து தரப்பிலும் நாங்கள் வெற்றி பெற்று வருகின்றோம் இவ்வாறு கூறினார்.
 
அமெரிக்காவின் இடைத்தேர்தலில் சீனாவின் குறுக்கீடு இருக்கும் என்று டிரம்ப் வெளிப்படையாக கூறியுள்ளது இந்த வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ள இருநாடுகள் மீதும் மற்ற அனைத்து நாடுகளின் பார்வையை மிக உன்னிப்பாக கவனிக்க வைத்திருக்கிறது.
webdunia
ஏற்கனவே கடந்த முறை நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது என்று அமெரிக்க எதிர்கட்சிகள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மறுபடியும்... அதே 'மழையா'... கேரளாவுக்கு திடீர் எச்சரிக்கை...