Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டாம பாத்துக்கோங்க! - மத்திய அரசுக்கு இலங்கை வேண்டுகோள்!

Advertiesment
தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டாம பாத்துக்கோங்க! - மத்திய அரசுக்கு இலங்கை வேண்டுகோள்!

Prasanth Karthick

, வெள்ளி, 7 மார்ச் 2025 (09:30 IST)

தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் விவகாரத்தில் மீனவர்கள் எல்லைத் தாண்டாமல் மத்திய அரசு நடவடுக்கை எடுக்க வேண்டுமென இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

தமிழகத்தை சேர்ந்த நாகை, ராமநாதபுரம், குமரி என பல பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் வங்க கடலில் மீன் பிடித்து வரும் நிலையில் அடிக்கடி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்வதும், அவர்களது மீன்பிடிப் பொருட்களை சேதம் செய்வதும் பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. தமிழக மீனவர்கள் விவகாரத்தில் நிரந்தர தீர்வு தேவை என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 

இந்நிலையில் இலங்கை அரசு இந்திய அரசிடம் ஒரு கோரிக்கையை வைத்துள்ளது. மீனவர் பிரச்சினையை முன்னிறுத்தி பேசிய இலங்கை துறைமுகம், போக்குவரத்து அமைச்சர் பில் ரத்னநாயகா “இலங்கைக்கு இந்திய அரசு ஏராளமான உதவிகளை செய்து வருகிறது. ஆனால் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வராமல் தடுத்தால் அது யாழ்ப்பாண மக்களுகு பெரும் உதவியாக அமையும். வட இலங்கையின் மன்னார், தலை மன்னார் பகுதிகளில் எந்த தொழிற்சாலையும் இல்லை. அப்பகுதி மக்கள் மீன் பிடித்தலையே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். அதனால் மீனவர்கள் எல்லை தாண்டாமல் இந்திய அரசு தடுத்தால் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம்” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாங்க போட்டது நாடகம்னா.. அதுல நடிச்ச நீங்க யாரு? - ஜெயக்குமாருக்கு ஆர்.எஸ்.பாரதி கிடுக்குப்பிடி!