Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து.. நடுவானில் இரு விமானங்கள் மோதியதால் பரபரப்பு..!

Siva
வெள்ளி, 21 பிப்ரவரி 2025 (07:54 IST)
அமெரிக்காவில் சமீப காலமாக விமான விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், இன்று காலை அமெரிக்க நேரப்படி 8:28 மணிக்கு ஹரிசோன் மாகாணத்தில் உள்ள ஒரு பகுதியில் 172 எஸ் என்ற விமானம் புறப்பட்டு சென்றது.

அதே சமயம்,   மற்றொரு விமானமும் நடுவானில் பறந்து கொண்டிருந்த  நிலையில், இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதின. இரு விமானங்களும் ஒற்றை எஞ்சின் கொள்ளவை என்றும், இவை மோதிக்கொண்டதில் தீப்பிடித்து கீழே விழுந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தில், இரண்டு விமானங்களில் இருந்த தலா ஒருவர் என மொத்தம் இருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும், விரைவில் விபத்துக்கான காரணம் தெரியவரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட விமான விபத்தில் 67 பேர் உயிரிழந்த நிலையில், அமெரிக்காவில் தொடர்ந்து விமான விபத்துகள் நிகழ்ந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments