அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் கையில் விலங்கிட்டு நாடு கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குஜராத் சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கைகளை விலங்கிட்டு கொண்டு போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் குறித்து பிரதமர் மோடி மௌனம் காப்பதாகவும், போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏக்கள் குற்றம் சாட்டினர். அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களில் பெரும்பாலோர் பஞ்சாப், ஹரியானா, குஜராத் மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் கைகளில் விலங்கிட்டு நாடு கடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அமெரிக்காவின் இந்த செயலை கண்டிக்க வேண்டும் என்றும், நாடு கடத்தப்படுபவர்கள் மரியாதையாக நடத்த இந்தியா வலியுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து, குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இன்று கைகளில் விலங்கிட்டு சட்டமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். இதனால், அந்த பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.