அமெரிக்காவில் உள்ள ரீகன் விமான நிலையத்தில் சமீபத்தில் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் மோதிய விபத்தில் 67 பேர் பலியான சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது.
இந்த சம்பவத்தின் பின்னணியில், விமான நிலையத்தில் பணிபுரியும் பராமரிப்பு மற்றும் நிர்வாக ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தி, ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் அருகே உள்ள ரொனால்ட் ரீகன் விமான நிலையத்தில் அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானம் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் மோதியதில், விமானம் வெடித்து சிதறி 67 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க விமான போக்குவரத்து துறை விசாரணை நடத்தி வருகிறது.
முதல் கட்டமாக, விமான நிலையத்தில் பணிபுரியும் பராமரிப்பு மற்றும் நிர்வாக ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கெதிராக, விமான ஊழியர்கள் சங்கம் தங்கள் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.
அரசின் இந்த நடவடிக்கை காரணமாக மீதம் இருக்கும் ஊழியர்களின் பணி சுமை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதோடு, இதனால் மேலும் விமான விபத்துக்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் சங்கம் தெரிவிக்கிறது. எனவே, இந்த பணிநீக்க நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.