கடந்த நான்காம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய தைப்பூச விழா, 11ஆம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. அப்போது பல பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில், தைப்பூச திருவிழா நிறைவடைந்த பின்னரும் பக்தர்களின் வருகை குறையவில்லை. ஏராளமான பக்தர்கள் பழனியை நோக்கி வந்து கொண்டிருப்பதுடன், இன்னும் சில பக்தர்கள் அலகு குத்தி, காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இன்று, கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் குழுவாக பழனி முருகனை தரிசிக்க பாதயாத்திரையாக வந்துள்ளனர். அதே குழுவில் சேர்ந்த 18 பேர் காவடி எடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பத்துக்கு மேற்பட்டோர் அழகு குத்தி வந்தபோது, பொதுமக்கள் அவர்களை செல்போனில் படம் பிடித்துள்ளனர்.
இது குறித்து அந்த குழுவை சேர்ந்தவர்கள் கூறிய போது, "கடந்த 49 ஆண்டுகளாக நாங்கள் தொடர்ச்சியாக பழனிக்கு பாதயாத்திரை வருகிறோம். தைப்பூசத் திருவிழா முடிந்த பிறகு பாதயாத்திரையாக வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.