இங்கிலாந்தில் 2030 ஆம் ஆண்டு வரை மட்டுமே டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்கள் பயன்பாடு இருக்கும் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் மற்றும் டீசல் எந்திரங்களால் சுற்றுசூழல் மாசுபாடு அதிகமாகி வருவதாக உலகெங்கும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் உலக நாடுகள் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற முயற்சித்து வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் 2030-க்குப் பிறகு டீசல், பெட்ரோல் கார்கள் விற்பனை செய்யப்படாது எனக் கூறியுள்ளார்.
முதலில் 2040 ஆம் ஆண்டில் இந்த திட்டத்தை அமல்படுத்த முயன்றது. ஆனால் இப்போது அதை 2030 ஆம் ஆண்டே செயல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.