Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹாட்ஸ்டார் ப்ளஸ் டிஸ்னியில் சாதனை படைத்த மூக்குத்தி அம்மன்!

ஹாட்ஸ்டார் ப்ளஸ் டிஸ்னியில் சாதனை படைத்த மூக்குத்தி அம்மன்!
, வியாழன், 19 நவம்பர் 2020 (12:06 IST)
நயன்தாரா மற்றும் ஆர் ஜே பாலாஜி ஆகியோர் நடிப்பில் உருவான மூக்குத்தி அம்மன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

தீபாவளியை முன்னிட்டுதில் ஓடிடியில் ரிலிஸான மூக்குத்தி அம்மன் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாகவும், ஆர் ஜே பாலாஜி மற்றும் ஊர்வசி உள்ளிட்டோர் மற்ற கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர். ஆர் ஜே பாலாஜியுடன் இணைந்து என் ஜி சரவணன் இயக்கியிருந்தார். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முழுக்க முழுக்க காரணம் நயன்தாராதான் என்றால் அது மிகையாகாது.

இந்நிலையில் மூக்குத்தி அம்மன் வெளியாகி சில நாட்களிலேயே இதுவரை ஹாட்ஸ்டாரில் வெளியான அனைத்துப் படங்களின் பார்வைகளையும் தாண்டி முதலிடத்தில் உள்ளதாம்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நயன்தாராவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிய நெட்பிளிக்ஸ் – விக்னேஷ் சிவன் ரியாக்‌ஷன்!